சென்னை அருகே, பெற்றோர்கள் முன்னிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த மாணவி.!  - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது பெற்றோர்கள் முன்னிலையில், கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சொக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள தண்டலம் பகுதியில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி அபிதா. இவரின் தந்தை அரியலூர் மாவட்டத்தின் சிமெண்ட் ஆலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த அபிதா, கொரோனா ஊரடங்கு காரணமாக காரணமாக அரியலூரில் உள்ள ஒரு வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார். தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மீண்டும் நேரடி வகுப்பில் பயின்று வந்து உள்ளார்.

ஆனால், மனைவி கல்லூரி நேரடி வகுப்புகள் தொடங்கிய முதல் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆசிரியர்கள் அவருக்கு தொடர்ந்து அதற்கான சிகிச்சையை அளித்து உள்ளனர்.

இருந்த போதிலும் மாணவி அபிதா 'நான் கல்லூரிக்கு வர விருப்பம் கொள்ளவில்லை. பெற்றோர்களின் கட்டாயத்தினால் மட்டுமே நான் கல்லூரிக்கு வந்திருக்கிறேன்' என்று தொடர்ந்து கூறிவந்துள்ளார்.  இதனை அடுத்து பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

நேரில் வந்த பெற்றோர்களுடன் மாணவியை ஒப்படைத்து, 'நீங்கள் மாணவிக்கு மன அழுத்தம் குறைந்த பிறகு கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள்' என்று சொல்லி கலோரி நிர்வாகமே சொல்லியதாக தெரிகிறது.

அப்போது மாணவி பெற்றோர்களை கல்லூரி வாசலிலேயே வாசலில் நிற்க சொல்லி விட்டு, நான் என்னுடைய அறைக்கு சென்று வருகிறேன் என்று சென்றிருக்கிறார். சற்று பொறு என்று பெற்றோர்கள் சொல்லும் முன்னதாகவே, மாணவி அபிதா வேகமாக ஓட்டம் பிடித்தார்.

நேரடியாக கல்லூரியின் மாடிக்கு ஓடி சென்ற மாணவி, யாரும் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் அருகிலிருந்த நபர்கள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் பெற்றோரிடம் மாணவிக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? அல்லது மன அழுத்தம் காரணமாகத் தான் இந்த முடிவை அவர் எடுத்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student suicide near chennai


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal