விசேஷ வீட்டில் மயங்கி விழுந்த மாணவி... டாக்டர் சொன்ன அந்த ஷாக் நியூஸ்...! - 16 வயது சிறுமி கர்ப்பம்... 17 வயது கல்லூரி மாணவர் போக்சோவில் கைது!
Student fainted special house shocking news told by doctor 16 year old girl pregnant 17 year old college student arrested under POCSO
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர், ஊட்டியில் உள்ள கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். அதே கல்லூரியில், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியும் படித்து வந்துள்ளார். ஒரே கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நாளடைவில் நெருக்கமான பழக்கமாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது உறவினர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலைக் கேட்டு மாணவியின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.மகளின் நிலை குறித்து அறிந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது, அதே கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அந்தப் பழக்கத்தின் காரணமாக மாணவி கர்ப்பமடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து, சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பந்தப்பட்ட 17 வயது மாணவரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Student fainted special house shocking news told by doctor 16 year old girl pregnant 17 year old college student arrested under POCSO