மும்பையில் பங்கு முதலீட்டு மோசடி –  ரூ.8 கோடி இழந்த மூதாட்டி! - Seithipunal
Seithipunal


பங்கு முதலீட்டில் அதிக லாபம் வரும் என நம்பி இளம் பெண் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் மூதாட்டி ரூ.8 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

மும்பை பாந்த்ராவை சேர்ந்த 62 வயது மூதாட்டிக்கு, பங்கு முதலீட்டில் அதிக லாபம் வரும் என வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.மோசடிக்காரர்கள் புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் பெயரில் நடித்த அவர்கள் மூதாட்டியை நம்பவைத்து கழுத்தை அறுத்துள்ளனர்.

அப்போது இளம் பெண் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் மூதாட்டி ரூ.8 கோடி பல வங்கி கணக்குகளுக்கு மாற்றினார்.இதையடுத்து பணத்தை திரும்ப பெற முயன்றபோது மீண்டும் 10% டெபாசிட் செய்யுமாறு கேட்டனர்.ஆனால் அவர்கள் தகுந்த பதிலும் தரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி
சந்தேகமடைந்த அவர், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது,அதில் ஒரு  நிறுவனம்  சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

பலவீனமான PASSWORD இருந்ததால்  158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடப்பட்டது.பிரிட்டன் போக்குவரத்து நிறுவனம் கே.என்.பி. லாஜிஸ்டிக்ஸ், 158 ஆண்டுகள் பழமையானது.

இந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் பலவீனமான கடவுச்சொல் பயன்படுத்தியதால் 'அகிரா' சைபர் கும்பல் ஹேக் செய்தது.அப்போது ஹேக்கர்கள் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கி ரான்சம் (பணம்) கோரினர்.ஆனால் பணம் வழங்க முடியாததால் நிறுவனம் மூடப்பட்டது.இந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,இதனால் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.இந்த கே.என்.பி. லாஜிஸ்டிக்ஸ் சுமார் 500 லாரிகள் மூலம் பிரிட்டன் முழுவதும் சேவை செய்தது.

சமீபத்தில் பிரிட்டனில் பல நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stock investment fraud in Mumbai 80 million lost by an elderly woman


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->