சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்..அதிமுக உரிமை மீட்பு குழு வலியுறுத்தல்!
Steps should be taken to set up green pandals at signals. AIADMK Rights Restoration Committee
புதுச்சேரியில் அனைத்து முக்கிய சிக்னல்களிலும் பசுமை பந்தல் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :வரலாறு காணாத மழையின் காரணமாக புதுவை மக்கள் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து பாதிப்பில் இருந்து இப்போது மீண்டு வரும் நிலையில்புதுவை மாநிலத்தில் இரவு நேரங்களில் பனி பொழிவும் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்தும் காணப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து காத்திட பசுமை பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு தேர்தல் நடைமுறை அமலில் இருந்ததால் புதுவை பொதுப்பணித்துறை சார்பில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.
இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
வானிலை ஆய்வு மையம் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு வெப்பம் ஒரு டிகிரி முதல் 2 டிகிரி வரை அதிகரித்து இருக்கும் என்று கூறியுள்ளது.இந்த ஆண்டு வெயில் சற்று முன்னதாகவே ஆரம்பித்ததாக தெரிகிறது.பகல் வேளையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக சிரமங்களை தடுக்க இந்த ஆண்டும் பொதுப்பணி துறையின் சார்பில் அனைத்து முக்கிய சிக்னல்களிலும் பசுமை பந்தல்கள் அமைக்க பொதுப்பணித்துறை உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சிக்னல்களில் அமைக்கப்படும் பசுமை பந்தல்கள்களின் உறுதியை பொதுப்பணி அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும்.சில நேரங்களில் திடீரென அடிக்கும் காற்றின் வேகத்தில் சரிந்து விழும் நிலை இருக்கக்கூடாது. பொதுமக்களின் மிக அவசியமான தேவை ஒன்றாக வெயிலில் இருந்து வாகன ஓட்டிகளை காத்திடும் இந்த பசுமை பந்தல் அமைக்கும் விவகாரத்தில் முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக அனைத்து முக்கிய சிக்னல்களிலும் பசுமை பந்தல் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Steps should be taken to set up green pandals at signals. AIADMK Rights Restoration Committee