நாங்குநேரி - பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடிவு - அமைச்சர் மா.சு தகவல்.!  - Seithipunal
Seithipunal


நாங்குநேரி சம்பவம் - பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடிவு - அமைச்சர் மா.சு தகவல்.! 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். 

அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, "பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மகனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று மாணவனின் தாயார் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அந்த மாணவன் 18 வயதை கடந்ததும் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காயமடைந்த இருவரும் குணமடைந்ததும் அவர்களை பாதுகாப்பாக படிப்பை தொடர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு தேவையான கல்வியை தொடர அரசு துணை நிற்கும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stanli hospital doctors appointment for nanguneri boy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->