#Breaking: பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் பெற பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு அல்லது இணைய முறையில் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வரும் ஜூன் 15 ஆம் தேதிமுதல் மாணவர்களுக்கு தேர்வுகள் துவங்கவுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிமுதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பத்திரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு செல்ல வழியில்லாத நிலையில், மாணவர்கள் இணையதளத்தின் வாயிலாக ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு எழுதும் மாணவர்கள் மற்றும் விடுபட்ட தேர்வுகளை எழுத்தவுள்ள 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSLC and 11 th, 12 th exam hall tickets


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->