பயணிகளின் ஜனநாயகக் கடைமைக்காக சென்னை - நாகர்கோவில் இடையே அதிரடி சிறப்பு ரயில்...!- தெற்கு ரயில்வே
Special train between Chennai and Nagercoil democratic rights passengers Southern Railway
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிக்கும் மக்களுக்கு பெரிய நிம்மதியாக, தெற்கு ரயில்வே ஒரு சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.
வண்டி எண் 06072 கொண்ட இந்த சிறப்பு ரெயில், 22 ஆம் தேதி பிற்பகல் 01.25 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.

பயணத்தின் போது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர் மற்றும் ஸ்ரீரங்கம் போன்ற முக்கிய நிலையங்களை கடந்து, திருச்சியை இரவு 07.35 மணிக்கு அடைகிறது.
பின்னர் அங்கு குறுகிய இடைவேளைக்கு பிறகு, 07.45 மணிக்கு மீண்டும் பயணத்தை தொடரும் இந்த ரெயில், விருதுநகர், சத்தூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை,கோவில்பட்டி மற்றும் நெல்லை வழியாக சென்று, 23 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு நாகர்கோவிலில் சென்றடைகிறது.
மேலும், பயணிகள் வசதியை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு சேவைக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணியிலிருந்து தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு திரும்பும் மக்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
English Summary
Special train between Chennai and Nagercoil democratic rights passengers Southern Railway