கூடுதல் பெட்டிகள் இணைப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே...! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா...?
Southern Railway has issued a statement regarding the connection of additional coaches Do you know which towns
தெற்கு ரெயில்வே தற்போது செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ளதாவது,"சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே இயங்கும் வாராந்திர விரைவு ரெயிலில் (எண்.12689/12690) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.

அதேபோல் சென்ட்ரல்-பகத் கோத்தி இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலில் (எண்.06157/06158) 28-ந்தேதி முதல் 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஈரோடு-ராஜஸ்தான் மாநிலம் பார்மர் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06097/06098) 27-ந்தேதி முதல் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டியும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் போத்தனூர்-பீகார் மாநிலம் பாரவுனி இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06055/06056) 3 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், கோவை-தன்பாத் இடையே இயங்கும் விரைவு ரெயிலில் (எண்.06063/06064) ஒரு இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், 2 குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டிகளும், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.
தாம்பரம்-செங்கோட்டை இடையே இயங்கும் விரைவு ரெயில் (எண்.20681/20682) வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 19-ந்தேதி வரையும், தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரெயிலில் (எண்.20657/20658) நாளை முதல் ஜூன் 17-ந்தேதி வரையும் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்.
அதேபோல் சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரெயில் (எண்.12695/12696) 27-ந்தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரையும், சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரெயிலில் (எண்.22639/22640) இன்று (சனிக்கிழமை) முதல் ஜூன் 25-ந்தேதி வரையும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.இதனால் பயணிகள் கவலையின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Southern Railway has issued a statement regarding the connection of additional coaches Do you know which towns