மதுரை டூ வல்லபாய் படேல் சிலை சிறப்பு சுற்றுலா இரயில் சேவையை அறிவித்தது தென்னக இரயில்வே.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிகப்பெரிய துறையாக விளங்கி வரும் இரயில்வே, இந்தியாவின் சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் பல இரயில்களை தொடர்ந்து இயக்கி வருகிறது. இதன் மூலமாக இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் பயணித்து, அதன் அழகையும், எழிலையும் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னக இரயில்வே சுற்றுலா இரயிலுக்கான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பில், " இந்திய இரயில்வேயின் சுற்றுலா பிரிவில் தென்னிந்தியாவில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை காணுவதற்கு சிறப்பு இரயில்வே சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரயில் வரும் 29 ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை மார்க்கமாக ஐதராபாத் அருங்காட்சியகம், பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோவில், ஜாலியன் வாலாபாக், ஜெய்ப்பூர், குஜராத் மாநிலத்தின் கடல் கோவில் வழியில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை சென்றடைகிறது. 

சுமார் 12 நாட்கள் மேற்கொள்ளப்படும் பயணத்தில் மேற்கூறிய ஊர்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கப்படும். 12 நாட்களும் சைவ உணவு, இரயில் மற்றும் உள்ளூர் போக்குவரத்து கட்டணம் என நபருக்கு ரூ.11 ஆயிரத்து 340 நிர்ணயம் செய்யப்படுகிறது. 

அரசின் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு குடும்ப சுற்றுலாவாக இந்த சிறப்பு இரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 82879 31977, 82879 31974 என்ற எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway Announce Special Tourist Train to Madurai to Gujarat Vallabhbhai Patel Statue 12 Days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->