தென் மாநில தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில தேர்தல் தலைமை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான், லட்சத்தீவுகள் யூனியன் பிரதேச பிரதேசங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், வாக்குச்சாவடி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் தர்மேந்திர ஷர்மா உள்ளிட்ட அகில இந்திய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South state electoral officers consultative meeting started


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->