கையில் கட்டைப்பயுடன் பாம்புக் கடித்த மாணவியை அழைத்து வந்த ஆசிரியர்கள்.! திறந்து பார்த்த போது அதிர்ச்சி.!
Snake Bite Dindukkal College women
திண்டுக்கல்லில் அரசு மகளிர் கல்லூரியில் படித்த மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மீனா என்ற பெண் முதல் வருடம் படித்து வந்துள்ளார். இன்று காலையில் மீனா கல்லூரி மைதானத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மீனாவின் காலில் பாம்பு வந்து கொத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி பேராசிரியர்கள் மீனாவை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும், மாணவியை மருத்துவமனையில் சேர்க்க அவர்கள் வந்த போது மீனாவை கடித்த பாம்பையும் அவர்கள் கையோடு ஒரு கட்டை பையில் போட்டு எடுத்து வந்துள்ளனர்.
இதை மருத்துவர்களிடம் காட்டிய நிலையில் அவர்கள் அலறி அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மீனாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Snake Bite Dindukkal College women