உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி! கூலி ஆட்கள் போல் வேலை செய்த பள்ளி மாணவர்கள்?! பாஜக தரப்பில் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கவிருக்கும் ஒரு நிகழ்ச்சி நடக்கவிருக்கும் மைதானத்தை சுத்தம் செய்யவும், சீர் செய்யும் பணிகளில் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

படிக்கும் மாணவ செல்வங்களை கூலி தொழிலாளிகள் போல் வேலை வாங்கும் இந்த செயலை, பல்வேறு தரப்பினரும் கண்டித்ததுடன், இனி இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், மைதானத்தை சுத்தம் செய்யவும், சீர் செய்யும் பணிகளில் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

பள்ளிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததாக மார் தட்டி கொள்ளும் அமைச்சர் அன்பில் மகேஷ் சொல்லப்போகிறார்? 

இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வாரா? உங்கள் ஏரியாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இப்படி மாணவர்களை  துன்புறுத்துவதா? இந்த செயலில் மாணவர்களை ஈடுபடுத்தியவர்கள் மீது நடடிக்கை பாயுமா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sivagangai Udhay Program School Student Work in Ground


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->