#சிவகங்கை: திருமண ஆசை காட்டி, நெருங்கி பழகி ஏமாற்றிய போலீஸ் இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமம் அமைந்துள்ளது. இதில் வசித்து வரும் ராஜா என்ற 27 வயது இளைஞர் சிவகங்கை ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இத்தகைய நிலையில், ராஜா மானாமதுரை ரயில்வே பகுதியில் குடியிருக்கும் ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜா அவரிடம் நெருக்கமாக பழகிவிட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதன் காரணமாக ஏமாற்றம் அடைந்த அந்த இளம் பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இது பற்றிய புகாரின் பேரில் கடந்த மே மாதத்தில் காவல்துறையினர் ராஜா மீது வழக்கு பதிந்துள்ளனர். இதை எந்தவித இடையூறும் இல்லாமல் முறையாக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தனி அதிகாரி நியமிக்க கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் தீவிரம் காட்டிய மானாமதுரை போலீசார் விசாரணையின் முடிவில் ராஜா மீது குற்றம் இருப்பது உறுதியாகி அவரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai District police arrested in women Cheating case


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->