ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் திகில் திருப்பம்.! சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட பொருள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை  சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்பீக் உள்ளட்ட தீவிரவாதிகளை போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற துப்பாக்கி தொடர்பான தகவல்களை காவல்துரையிடம் தெரிவிக்க மறுத்து வந்த கொலையாளிகள் இருவரையும் தமிழக போலீசார் கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை கழிவு நீரோடை ஒன்றில் வீசியதை கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த கழிவு நீரோடையில் இருந்து துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களும் கண்டு பிடிக்கப்பட்டது.

பதினோரு தோட்டாக்களை கொண்ட அந்த துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் மீதம் இருந்த ஆறு தோட்டாக்களும் துப்பாக்கியும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அந்த துப்பாக்கி தோட்டாக்களையும், தீவிரவாதிகள் இருவரையும் தமிழகம் கொண்டு வந்த போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் தொடர்பாகவும் அவர்களுக்கு எந்தெந்தத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

si willson murder gun has identified in drainage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->