கரூர் சம்பவம் - தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு.!!
shops closed in tamilnadu for karoor incident
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் உள்பட பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் தழுவிய இந்தக் கடையடைப்பில், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தடைபடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
shops closed in tamilnadu for karoor incident