ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்!
Shanghai Cooperation Conference Prime Minister Modis visit to China
இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்படர் 1 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதற்காக பிரதமர் மோடி வருகிற 31-ந்தேதி சீனாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2019-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் ஆகும்.இந்த மாநாட்டில் பங்கேற்கும் முன்னர், அவர் ஜப்பான் நாட்டுக்கு ஆகஸ்டு 30-ந்தேதி பயணம் மேற்கொண்டு பிரதமர் புமியோ கிஷிடா உடன் இணைந்து, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அதனை நிறைவு செய்த பின்னர் சீனாவுக்கு செல்வார் என தகவல் தெரிவிக்கின்றன. 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவ வீரர்கள் அளவிலான மோதல் போக்கு ஏற்பட்டபோது , ராணுவ தளபதிகள் அளவிலான உயர்மட்ட கூட்டம் நடத்தி பேச்சுவார்த்தை நடத்தி எல்லை பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் குயிங்டாவோ நகரத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்த நிலையில், கூட்ட முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படாது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது என கூறியது .இந்த சூழலில், சீனாவுக்கான பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் அமைகிறது.
English Summary
Shanghai Cooperation Conference Prime Minister Modis visit to China