இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் விஜய்யின் அலுவலக கணக்காளர் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


சென்னை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் தொலைக்காட்சி நேர்காணலுக்கும் சென்றபோது ராஜேஷ் (வயது 32) என்பவர் அறிமுகமானார். 

ராஜேஷ் தன்னை நடிகர் விஜய்யின் கணக்காளர் என அறிமுகப்படுத்தி நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம் பெண்ணிடம் தெரிவித்துள்ளார். 

உங்களை காதலிக்கிறேன் என ஆசை வார்த்தைகளை தெரிவித்து பெண்ணை தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

மேலும், இதனை வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என ராஜேஷ் மிரட்டி உள்ளார். இது தொடர்பாக இளம் பெண் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் கணக்காளர் என தெரிவித்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் அண்ணன் நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

நடிகர் விஜய் நேற்று திருநெல்வேலிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில் தற்போது அவரின் கணக்காளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sexualharassing case Actor Vijay office accountant arrested


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->