செந்தில் பாலாஜி உடல் நலம் பெற வேண்டி, மாரியம்மன் கோவிலில் திமுக நிர்வாகிகள் மொட்டையடித்து அங்கபிரதட்சணம்! - Seithipunal
Seithipunal


கடந்த 13-ந்தேதி கரூரில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இல்லங்கள், அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தொடர்ந்து மறுநாள் அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில்பாலாஜியை கைது செய்து, நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது திடீர்யென அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


  
மேலும், அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ததில், இருதய ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதும், அதற்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் யென்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். 

இதற்கிடையே அமலாக்கத்துறையினர் மற்றும் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த வழக்கில், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி நல்ல உடல்நதுடன் மீண்டு வரவேண்டும் என, கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், திமுக நிர்வாகிகள் மொட்டை அடித்து, கோவில் வளாகத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து, மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji health issue DMK Member Pray in Kerur Mariyamman Temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->