ஐடி அனுப்பிய 2வது சம்மன்.. ஆஜராகாமல் தப்பும் அசோக் குமார்.. அடுத்த கைது இவர்தானோ..? - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2வது முறையும் ஆஜராகவில்லை என வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் ஜூன் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு முதலாவது சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் நேரில் ஆஜராகுமாறு வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அந்த நோட்டீசில் ஜூன் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராக மாறு அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை வருமானவரித்துறை அதிகாரிகள் 2வது முறையாக அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2வது முறையாக நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

வருமானவரித் துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்ய வாய்ப்புள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அசோக் குமார் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் பரவலாக பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji brother AshokKumar did not appear 2nd time before IT


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->