கால்நடை நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி விழிப்புணர்வு! - Seithipunal
Seithipunal


சேலம்: ஏற்காடு பட்டிபாடி வேலூர் கிராமத்தில் உள்ள மலை கிராம மக்களுக்கு பயனடையும் விதமாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியானது, சேலம் கால்நடை துறை உதவி இயக்குனர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகச்சியில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன? அதன் அறிகுறிகள் என்ன? நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், 100-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து மருத்துவர்கள் பாண்டியன், செல்வகுமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விரிவாக எடுத்துரைத்தனர்.

வேலூரின் ஊராட்சி மன்ற தலைவரான தனலட்சுமி சின்னசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam livestock diseases awareness issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->