திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல் - அதிர்ச்சியில் மீனவர்கள்.! - Seithipunal
Seithipunal


திடீரென உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல் - அதிர்ச்சியில் மீனவர்கள்.!

காலநிலை மாற்றத்தால், கடல் சீற்றம், உள்வாங்குதல் என்று அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக ராமேஸ்வரத்தில் அடிக்கடி கடல் உள்வாங்கும் சம்பவம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கடல், திடீரென 200 மீட்டர் அளவுக்கு உள்வாங்கியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகுகள் அனைத்தும் கடல் உள்வாங்கியதால் தரை தட்டி நின்றுள்ளது. இதைப்பார்த்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு பிறகு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sea inflow in rameshwaram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->