வேலூர் || பிறந்தநாளுக்கு புத்தாடை எடுக்க பணம் தராததால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


வேலூர் அருகே ஈடிகை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட மேஸ்திரியான இவரது மகன் தனசேகரன், கணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவன் தனசேகரனுக்கு வருகிற 10-ந் தேதி பிறந்தநாள் என்பதால் தனது பெற்றோரிடம் புத்தாடை வாங்கவும், நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கவும் ரூ.1,000 கேட்டுள்ளார்.

அதற்கு மாணவனின் தந்தை வெங்கடேசன் தன்னிடம் தற்போது பணம் இல்லை, சம்பளம் வாங்கிய பிறகு பணம் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் தனசேகரன் தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். 

இந்த நிலையில், தனசேகரன் நேற்று முன்தினம் இரவு படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை பொழுது விடிந்தும் நீண்ட நேரம் ஆகியும் மகன் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மகன் அறைக்குச் சென்று பார்த்தபோது தனசேகரன் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனசேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student sucide in vellore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->