அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளியல்! விளையாட்டு வினையாகி பள்ளி மாணவன் பலி! - Seithipunal
Seithipunal


அமராவதி ஆற்றில் முழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சத்திரம் நான்கு வழி சாலை உள்ள அமராவதி ஆற்றில் தற்போது தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பலரும் அமராவதி ஆற்றில் குறித்து நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆற்றுப்பாலத்தின் கீழ் பகுதியில் குண்டகம் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 6 மாணவர்கள் சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு அமராவதி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அனைவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஐந்து பேர் கரை ஏறி நிலையில் ஒருவர் மட்டும் கரை ஏறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்  காணாமல் போன தாராபுரம் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த  ராஜகோபாலின் மகன் ஜெரோமியாவை நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து ஆற்றில் இறங்கி தேடிப் பார்த்ததாக கூறப்படுகிறது. 

நீண்ட நேரமாக தேடியும் நண்பன் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக இதுகுறித்து தாராபுரம் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பெரில் அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி  காணாமல் போன மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை மீட்டு தீயணைப்பு துறை வீரர்கள் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School student dies after drowning in Amaravati river


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->