காவல்துறையின் வாகனம் மோதி பறிபோன பள்ளி மாணவி உயிர் - திருப்பூரில் பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


காவல்துறையின் வாகனம் மோதி பறிபோன பள்ளி மாணவி உயிர் - திருப்பூரில் பரிதாபம்.!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜயாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி மகள் திவ்யதர்ஷினி. இவர் விஜயாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ராஜேஸ்வரி நேற்று வழக்கம்போல பள்ளி முடிந்ததும், திவ்யதர்ஷினியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, காங்கயம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர்கள் பின்னால் வந்த நல்லூர் காவல் நிலைய வாகனம் ராஜேஸ்வரி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த காவல் வாகனத்தை ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரசின்ன கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த விபத்தில் சிறுமி திவ்யதர்ஷினி உயிரிழந்தார். மேலும், ராஜேஸ்வரி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சிறுமியின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பொதுமக்கள் காவல் வாகனத்தை ஒட்டி வந்த வீர சின்ன கண்ணன் என்பவர் போதையில் இருந்ததாகக் கூறி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் ஓட்டுநர் வீரசின்னகண்ணனை பிடித்து, விசாரித்து வருவதாக தெரிவித்தனர். மேலும், இந்தச் தொடர்பாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:-

“சாலையின் மையத்தடுப்பை ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது, காவல்துறை வாகனம் மோதியது. இதில், காவல்துறை வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி உயிரிழந்தார். காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்தவர், மது போதையில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது’’ என்றுத் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girl died collision on police vechicle in tirupur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->