நீங்கள் படித்திருக்கிறீர்களா..? சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக ரூ.15,000 மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக் கொள்ளுமாறு சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக தனது புத்தகங்களை ஏற்றுக் கொள்ள சிறைத்துறை மறுப்பதாகவும், அனைத்து புத்தகங்களையும் ஏற்றுக்கொள்ள சிரித்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கானது இன்று நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கைதிகளின் வாழ்க்கைக்கு புத்தகங்கள் உதவும் என்று கூறுகிறீர்கள். ஆனால் இந்த புத்தகங்களை எல்லாம் நீங்கள் படித்திருக்கிறீர்களா..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் விளம்பரம் நோக்கத்திற்காக இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku sankar petition dismissed by Chennai high court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->