கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்.. கணவனை விட்டு, காமத்தை நம்பி குடும்பத்தோடு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


வறுமையால் தாய் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி புதுவளவு பகுதியைச் சார்ந்தவர் பிரியங்கா. இவரது கணவர் சரத்குமார். இவர்கள் இருவருக்கும் குமார் என்ற 6 வயது மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக பிரியங்காவிற்கு பார்த்திபன் என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்படவே, அவரது கணவர் இதனை கண்டித்துள்ளார். 

மேலும், பார்த்தீபனுடன் கொண்ட பழக்கத்தை கைவிடக்கூறி கோரிக்கை வைக்கவே, குடும்பத்துடன் பேசி பார்த்தும் பலனில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், அண்ணன் நந்தகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பார்த்திபனை கொலை செய்துள்ளனர். 

இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்த சங்ககிரி காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரியங்காவின் தந்தை தங்கவேலுக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து வெளியே வந்துள்ளார். 

இந்நிலையில், தனது கள்ளக்காதலனும் கொல்லப்பட்டு, கணவரும் சிறைக்குச் சென்ற நிலையில் குழந்தைகளை கவனிக்க போதுமான பணம் இல்லாமல் பிரியங்கா வறுமையில் வாடியுள்ளார்.  பிரியங்கா கள்ளக்காதல் உறவால் குடும்பமே நிலைகுலைந்ததால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பிரியங்காவும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்க்கையில், பிரியங்காவின் ஆறு வயது மகன் குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். சிறுவனை அவசர ஊர்தி மூலமாக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வீட்டிலேயே பிரியங்காவும், அவரது 3 மாத பெண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர். இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Sankagiri Affair Murder case Family Suicide Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal