எச்சரித்தும் அடங்காத சேலம் காவலர்., ஆப்பு வைத்து அனுப்பிய கமிஷனர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் வீராணம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் வேல்விநாயகம் என்பவர் சேலம் மாநகரில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யும் கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். 

இது குறித்து காவல் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், கமிஷனர் அவரை அழைத்து எச்சரித்துள்ளார். 

இருப்பினும் வேல்விநாயகம் சேலம் மாநகரில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்யும் கும்பலுடன் தொடர்ந்து தொடர்பு வைத்து வந்துள்ளார். இது தொடர்பாக தகவலறிந்த கமிஷனர், அவரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem police constable suspend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->