"தேர்வு நேரங்களில் கோவில் திருவிழா ஒலிபெருக்கிகள்.?" உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரிகொண்டாலம்பட்டி எனும் கிராமத்தில் சர்வசித்தி விநாயகர், காளியம்மன், மாரியம்மன், முனியப்பன் உள்ளிட்ட ஆலயங்களில் பொதுத்தேர்வு நேரத்தில், தேர்வுகள் முடியும் வரை தடை விதிக்கவும், ஒத்தி வைக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், மனதாரர் தரப்பில் கோவில்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதால் தேர்வுக்கு படிக்கின்ற மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகிறது. இதனால் அவர்களால் தேர்வுக்கு சரிவர கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. 

தேர்வு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் கடந்த 2019 முதல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். விழா குழு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதாக உறுதி அளித்தார். 

இதனைத் தொடர்ந்து, அந்த பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்து நீதிபதிகள், "பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். திருவிழா காலங்களில் தேர்வை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem General request Investigation in Madras High Court 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->