சேலம்: அச்சுறுத்தும் கரும்பூஞ்சை பாதிப்பு...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் கரும்பூஞ்சை தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது இதுவரை நோய்பாதித்தவர்களின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று மக்களிடையே பரவிவருகின்றது. இந்த தொற்றினால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கரும்பூஞ்சை தொற்று சேலம் மாவட்டத்தில் அதிக அளவு காணப்படுகின்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் 80 பேர் கரும்பூஞ்சை தொற்றால் அனுமதிக்கபடுள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழுந்துள்ளனர் மேலும் 10 பேருக்கு கண்கள் அகற்றபட்டுள்ளது. இது குறித்து சுகாதாரதுறையினர் கூறுகையில்: சேலம் மாவட்டத்தில் இதுவரை கரும்பூஞ்சை பாதிப்பு 419 ஆக உயர்ந்துள்ளது.இதில் 300 மேற்ப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் விலை உயர்ந்த ஊசிகள் குளுக்கோஸ் மூலம் செலுத்தி தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Black Fungus issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->