ஏற்காடு: மதுபோதையில் தறிகெட்டு இயக்கப்பட்ட டூ வீலர்.. 2 பெண்கள் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் அதிவேகமாக சென்ற கொடூரன், சாலையில் செல்லும் பெண்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூன்று பெண்கள், தங்களின் பணியை முடித்துவிட்டு ஏற்காடு தபால் நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தனர். 

இதன் போது, அவ்வழியாக மது போதையில் தாறுமாறாக வந்த இருசக்கர வாகனம், அவர்களின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண்கள் காயமடைந்த நிலையில், இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அங்குள்ள ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

தலையில் பலத்த காயமடைந்த இரண்டு பெண்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்த கொடூரன் சிவக்குமார் என்பவன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem Arcot Accident 2 Woman Injured when Biker Drinking Alcohol and Driving


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->