தமிழகம் முழுவதும் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை: இதுவரை 16 மெட்ரிக் டன் விற்பனை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு (பொட்டலத்துடன்) சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் தமிழ்நாடு அரசு இத்திக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை மாநிலம் முழுவதும் 184 விற்பனை நிலையங்கள் மூலம் மொத்தம் 16 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அரிசி ஒதுக்கீடு மற்றும் விநியோக விவரங்கள்
மொத்த ஒதுக்கீடு: இத்திட்டத்திற்காகத் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 574.058 மெட்ரிக் டன் அரிசி 34 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது; அவற்றில் 439.108 மெட்ரிக் டன் அரிசி விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் விற்பனை நிலவரம்: சென்னையில் உள்ள 19 விற்பனை நிலையங்கள் மூலம் இதுவரை 1,286 கிலோ சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கத்தின் வணிக வளாக முனையில் 298 கிலோவும், கார்த்திகேயன் சாலையில் 178 கிலோவும், பார்க் டவுன் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் முனையில் 120 கிலோவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அரிசி விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sale of Fine Rice at Rs 30 per Kg Across Tamil Nadu 16 Metric Tonnes Sold So Far


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->