விருகம்பாக்கம் பாலியல் வன்முறை வழக்கில் சாஜீவுக்கு 3 ஆண்டு சிறை!- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை நகரத்தை அதிரவைத்த பாலியல் வன்முறை வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளிவந்துள்ளது.கேரளாவைச் சேர்ந்த சாஜீவ் (32), லாரி கிளீனராக வேலை பார்த்தவர். விருகம்பாக்கம் மார்க்கெட் பகுதியில் கூலித் தொழிலாளர்களுடன் இருந்த 40 வயது பெண்ணை “வீடு சுத்தம் செய்ய வேண்டும்” எனக் கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், பிரியாணி வாங்கித் தருவதாக நம்பவைத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து நகை பறித்த வழக்கில் சாஜீவ் கைது செய்யப்பட்டார். பின்னர், கோயம்பேடு போலீசார் அவரை கைப்பற்றி புழல் சிறைக்கு அனுப்பினர்.இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணை முடிவில், நீதிபதி ராஜேஷ் ராஜூ, “குற்றம் தகுந்த சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது” எனக் கூறி, சாஜீவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sajeev gets 3 years prison Virugambakkam harassement violence case Court orders compensation victim


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->