உக்ரைன் மீது ரஷியா கொடூர தாக்குதல்.. 16 பேர் பலி - 155 பேர் காயம்!
Russia launches brutal attack on Ukraine 16 dead 155 injured
டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.அதுமட்டுமல்லாமல் கீவ் நகரத்தை ரஷியா கைப்பற்றியது.இன்று வரை ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் உருகுலைந்தன. மேலும் இரு நாடுகளை சேர்ந்த பலரும் இந்த போரில் உயிரிழந்தனர். இருந்த போதிலும் போர் தொடர்ந்து வருகிறது. போர் நீடித்துவரம் நிலையில் எல்லை நகரான டிரோஸ்டியாமேட்ஸை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர்அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்குப் பிறகு உக்ரைனில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தலைநகர் கீவ்-வின் பல பகுதிகளில் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு முழுவதும் 309 டிரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணை மழை பொழிந்தது.
இதில் 16 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 155 பேர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இறந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் அவனது தாயும் ஆகும் . காயமடைந்தவர்களில் 12 குழந்தைகளும் அடங்குவர் என கியேவ் மேயர் தெரிவித்தார்.
இதற்கிடையே டொனெட்ஸ்கின் முக்கிய கிழக்குப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான நகரமான சாசிவ்வைக் கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது.இந்தநிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ரஷியா மீது 100 வரி விதிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புடினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Russia launches brutal attack on Ukraine 16 dead 155 injured