கடலூரில் ஓய்வு பெற்ற துணை தலைமை காவலருக்கும் வார்டு உறுப்பினருக்கும் இடையே மோதல்..!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கங்காணங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினராக மலர்விழி இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஓய்வு பெற்ற துணை தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவர் வீட்டின் முன்பு பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது ஓய்வு பெற்ற துணை தலைமை காவலர் ராஜேந்திரன் எதற்காக இங்கு பள்ளம் தோண்டுகிறீர்கள் ? என்று கேட்டதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சில நிமிடங்களுக்கு பின் மோதலாக மாறியது. 

இந்த மோதலில் வார்டு உறுப்பினர் மலர்விழி, அவரது கணவர் மஞ்சினி, ஓய்வு பெற்ற துணை தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வார்டு உறுப்பினரின் கணவர் மஞ்சினி கொடுத்த புகாரின் பேரில் ஓய்வு பெற்ற துணை தலைமை காவலர் ராஜேந்திரன் மீதும், ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மஞ்சினி மற்றும் வார்டு உறுப்பினர் மலர்விழி ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rtd subinspector ward member fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->