பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி: மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை!
Rs. 45 crore fraud in dairy company Manager commits suicide after being suspended
பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து பணம் கையாடலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை புழல் பிரிட்டானியா நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் பஞ்சலால் (37), தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அவர் சமீபத்தில் ஆண்டு வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்தபோது, ரூ.45 கோடி கையாடல் நடைபெற்றிருப்பது அதிகாரிகள் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து நிறுவனம் சார்பில் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணைக்காக நவீனை அழைத்தபோது, “நாளை வருகிறேன், பணத்தை திருப்பித் தருகிறேன்” என்று கூறி பின்னர் தொடர்பை துண்டித்தார்.
அடுத்த நாளே வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
தற்கொலைக்கு, "விசாரணை, கைது சாத்தியம்" என்ற அழுத்தமே காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பண மோசடியில் மற்றோர் நபருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Rs. 45 crore fraud in dairy company Manager commits suicide after being suspended