சாலை விபத்தில் உதவுபவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சாலை விபத்தில் உதவி செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 2024ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் இன்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் தமிழக போக்குவரத்து குறித்த கேள்விகளுக்கும் விளக்கம் அளித்து வருகிறார். இந்த நிலையில் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில்  தமிழக அரசால் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்திய அரசு சார்பில் ரூ.5000 வழங்கப்படும் வரும் நிலையில், தற்போது மாநில அரசின் சார்பாக ரூ.5000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Road Accident helpers 5000 monkey to give Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->