அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி.. வெளியான உருக்கமான கடிதம்.! - Seithipunal
Seithipunal


ரஜினி மக்கள் மன்றத்தின் காஞ்சிபுரம்‌ செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்‌ ஜெ.ஜெயகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும், எதிர்கால நலன் கருதி தான் எடுத்துள்ள முடிவையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்த கடிதத்தில், " தன்னிகரற்ற மக்கள்‌ தலைவர்‌ சூப்பர்‌ ஸ்டார்‌ அவர்களுக்கு வணக்கம்‌.. காஞ்சிபுரம்‌ செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்‌ ஜெ.ஜெயகிருஷ்ணன்‌ எழுதிக்‌ கொள்வது, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்‌, தாங்கள்‌ முன்னெடுத்த ஆன்மிக அரசியலில்‌ தங்களுடன்‌ இணைந்து பணியாற்ற நினைத்தேன்‌.

தமிழகத்தில்‌ மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு தாங்கள்‌ ஆரம்பித்த ஆன்மீக அரசியலில்‌, தங்களுடன்‌ இணைந்து, தங்கள்‌ கரத்தை பலப்படுத்த வேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்தில்‌ இணைந்தேன்‌. எனக்கு பல்வேறு அரசியல்‌ பிரமுகர்களின்‌ அறிமுகங்கள்‌ இருந்தும்‌, எந்த கட்சியிலும்‌ அடிப்படை உறுப்பினர்‌ பதவியிலும்‌ இருந்தது கிடையாது என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

மேலும்‌, தங்களின்‌ உடல்நிலை கருதி, தாங்கள்‌ அரசியலில்‌ ஈடுபட முடியாது, என திட்டவட்டமாக அறிவித்திருந்தீர்கள்‌. இதில்‌ எனக்கு எந்த கோபமோ, மன விரக்தியோ அல்லது பிற அதிருப்தியும்‌ இல்லை. ஆனால்‌ தமிழக மக்களின்‌ நிலைமையை நினைத்து தான்‌ வருத்தபபட்டேன்‌. இந்த சூழ்நிலையில்‌ பல்வேறு அரசியல்‌ கட்சிகள்‌ என்னை அணுகி, அவர்களது கட்சியில்‌ சேர வேண்டும்‌ என அறிவுறுத்தினார்கள்‌. 

நான்‌ அதற்கெல்லாம்‌ செவி சாய்க்காமல் இருந்து வந்தேன். எனது கனவுத்‌ திட்டமான - பனைவளத்‌ துறை - என்ற திட்டத்தை, நமது ஆட்சியில்‌ செயல்படுத்த வேண்டும்‌ என எண்ணி இருந்தேன்‌. தமிழகத்தில்‌ 5 கோடி பனை மரங்கள்‌ உள்ளன. இதன்‌ மூலம்‌ விவசாயிகள்‌ ஆண்டுக்கு, ரூ.50 ஆயிரம்‌ கோடி ரூபாயை வருமானமாக ஈட்டலாம்‌. அத்துடன்‌ மூலம் லட்சம்‌ பேர்‌ வேலைவாய்ப்பை பெறலாம்‌.

மிகவும்‌ விரும்பிய பனை வளத்துறை” திட்டத்தை உங்களிடம்‌ சொல்லி செயல்படுத்த திட்டமிட்டிருந்தேன்‌. தற்போதைய சூழலில்‌ அதற்கு வாய்ப்பில்லாமல்‌ போனது. இந்த திட்டத்தை மாண்புமிகு. தமிழக முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி அவர்களிடம்‌ கூறினேன்‌. அவர்‌ அத்திட்டத்தை செயல்படுத்துவதாக உறுதியளித்ததுடன்‌, எங்கள்‌ கட்சியில்‌ இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தினார்‌.

இந்த திட்டம்‌ செயல்படுத்தப்பட்டால்‌, அதன்‌ மூலம்‌ கிடைக்கும்‌. பெருமை அனைத்தும்‌ தங்களையே சேரும்‌. எனவே இன்று முதல்‌ ரஜினி மக்கள்‌ மன்றத்திலிருந்து என்னை விடுவித்துக்‌ கொள்கிறேன்‌. நான்‌ இருக்கும்‌ இடத்தை தூய்மை படுத்துவேன்‌ நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவேன் " என்று தெரிவித்துள்ளார். இதனை அறிந்த உண்மையான ரஜினி ரசிகர்கள், வழியை பற்றி யோசனை செய்ய வேண்டாம். நமது இலக்கு வெற்றியடைய வேண்டிய செயலை செயல்படுத்துங்கள் என வாழ்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RMM Supporter J Jayakrishnan Wrote Letter to Rajinikanth Joined ADMK Future Decision


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->