பூண்டி ஏரில் இருந்து  உபரி நீர் வெளியேற்றம்..கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களின் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் பூண்டியில் 34,58 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 36 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய காலை நிலவரப்படி  கொள்ளளவு 3040 மில்லியன் கன அடியாக உள்ளது.  தற்போது ஆந்திர மாநிலம் கண்டலேறு அணை, ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 2500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்த்தகத்தின் இருப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

அணைக்கு வரும் நீர்வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளதீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று  2 மணி அளவில் விநாடிக்கு 700 கன அடி திறக்கப்பட்டது . நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அபாய சங்கு ஒலிக்காமல் நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் மேய்ச்சலுக்காக வந்த மாடுகள் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் நீர்த்தேக்கத்திலிருந்து  உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம் ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, நெய்வேலி,  எறையூர் பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர் வெள்ளியூர் , தாமரைப்பாக்கம் திருக்கண்டலம். ஆத்தூர், பண்டிக்காவலூர், ஜெகநாதபுரம் புதுகுப்பம் கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், ஆதவன்பாளையம் , மடியூர், சீமாவரம் , வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Release of surface water from Poondi Reservoir Flood alert for coastal residents


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->