கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை, உறவினர்கள் சாலை மறியல்..! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம்,சுப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்ற கர்ப்பிணிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை அங்கிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து அவர் சென்னைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதால்  அவரின் உடல்நிலை மோசமானது என உறவினர்கள் குற்றம்சாட்டினர். பிரசவத்தின் போது ஊழியர்கள் ரூ.2000 லஞ்சம் கேட்டனர். பணம் கொடுத்த பிறகுதான் பிரசவத்திற்கு அனுமதித்தனர் என குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Relative Protest in Thirupaththur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->