3 மாசமா., இதை செய்யாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்தாக வாய்ப்பு.? வெளியான செய்தி.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 இல் ஆதார் எண் அடிப்படையில் கணினி மயமாக்கப்பட்ட ரேஷன் அட்டைகள் கொண்டுவரப்பட்டது. இதனுடன் செல்போன் எண்கள் இணைக்கப்பட்டன. குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் இல்லாமல் ரேஷன் கடைகளில் பொருள் வழங்கப்படும் மாட்டாது என்று அறிவிப்பு வெளியானது. 

இதன் மூலம், பல போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டது. அத்துடன் அரசு நலத்திட்ட நிவாரண உதவிகளும், ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 

அதே நேரம் குடும்ப அட்டைகளுக்கு பொருள் வாங்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், போலி அட்டைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தமிழக உணவு பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் மாவட்ட வளங்கள் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதன்படி கடைசியாக மூன்று மாதங்கள் பொருள் வாங்காத குடும்ப அட்டைகளின் விவரத்தை தேடி அவர்களது மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு எதற்காக பொருட்கள் வாங்கவில்லை என்று காரணத்தை கேளுங்கள் என்றும், அப்படி சரிவர பதில் அளிக்காத குடும்ப அட்டைகளை ரத்து செய்ய உத்தரவு பிறவு ஏற்படுவதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ration card may cancelled for these peoples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->