வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம்.. கொலை..! மூச்சை நிறுத்த உத்தரவு பிறப்பித்த நெல்லை நீதிமன்றம்..!!  - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சார்ந்த 50 வயது பெண்மணி, மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவரது மகன் கோயம்புத்தூரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், செவிலியரின் கணவர் இறந்துவிட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 

இந்த தருணத்தில், கடந்த 2008 ஆம் வருடத்தில் செவிலியர் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டு இருந்த வேளையில், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்து, உறங்கிக்கொண்டு இருந்த செவிலியரின் வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர் இவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்துள்ளனர். வீட்டில் இருந்த 25 கிராம் தங்க நகையையும் கொல்லையடித்து தப்பி சென்றுள்ளனர்.

 

பின்னர் மறுநாள் காலையில் இவரது வீட்டில் எந்தவிதமான நடமாட்டமும் இல்லாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில், செவிலியர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பாளையங்கோட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் கல்லிடைக்குறிச்சி பகுதியை சார்ந்த கார்த்திக் (வயது 21), ராஜேஷ் (வயது 27), அயன்சிங்கம்பட்டி பகுதியை சார்ந்த மகேந்திரன் (வயது 24), வசந்தகுமார் (வயது 30), கன்னியாகுமரி பகுதியை சார்ந்த கணேசன் (வயது 51), தூத்துக்குடி பகுதியை சார்ந்த சின்னத்துரை (வயது 27) ஆறு பேரை கைது செய்தனர். 

இது தொடர்பான விசாரணையில் நகைக்காக கொலை செய்து பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு, கார்த்திக், மகேந்திரன் மற்றும் வசந்தகுமர், ராஜேஷ் ஆகியோரின் டி.என்.ஏ சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் வசந்தகுமார் மற்றும் ராஜேஷ் செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாகியுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவர்கள் ஆறு பெரும் நேற்று மாலையில் விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்திராணி குற்றம் சுமத்தப்பட்டுள்ள வசந்தகுமார் மற்றும் ராஜேஷிற்கு தூக்குத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

இந்த குற்றவழக்கில் தொடர்புடைய பிற நால்வரையும் விடுதலை செய்த நிலையில், தூக்குத்தண்டனை கைதிகள் இருவரும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், செவிலியரை கொலை செய்த நால்வருக்கு எந்தவிதமான தண்டனையும் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rape and kill in nellai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->