ஆர்.டி.ஓ பிளாக் லிஸ்ட் லாரியில் ஓவர் லோடு.. லாரிக்கு 3 டன் அரிசி கொள்ளை.. அரங்கேறும் சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


அரசின் வாணிப கிட்டங்கியில் இயங்கும் லாரிகள், ஆர்.டி.ஓ பிளாக் லிஸ்டில் உள்ள நிலையில், அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும், கிட்டங்கியில் அரிசி கொள்ளை நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை நவல்பூர் பகுதியை சார்ந்தவர் கனி பாய் (Gani). இவர் வாலாஜாபேட்டையில் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதிமுக பிரமுகர் என்று கூறப்படும் நிலையில், அவரின் அரசியல் பலத்தினை வைத்து, கனி பாய் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்பந்தத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் நவல்பூர் கனி பாய் ஆவணங்கள் இல்லாத, பராமரிப்பு இல்லாத லாரிகளை இயக்கி வருவதாகவும், அதிகளவு பாரம் ஏற்றி லாரியின் எடையை குறைவாக காண்பித்து, கிட்டங்கியில் இருந்து வெளியே வரும் அரிசி போன்ற பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. 

அதிமுக பிரமுகராக இருந்து வரும் நவல்பூர் கனி பாய், வனாப்பாடி அதிமுக பிரமுகர் வ. ருக்கு மற்றும் கிட்டங்கியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் குட்டியப்பன் ஆகியோர் சேர்ந்து இந்த சட்டவிரோத செயல்களை அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் குட்டியப்பன் பார்வைக்கு தெரிந்தே அரிசி இருசக்கர வாகனங்களில் மூட்டை மூட்டையாக வெளியே அனுப்பிவைக்கப்பட்டும் உள்ளது என தெரியவருகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

கனி பாய் மற்றும் ருக்குவுக்கு சொந்தமான லாரிகளில் அதிகளவு பாரம் ஏற்றிக்கொண்டு, அந்த பாரத்தினை குறைவாக காண்பித்து, வெளிச்சந்தையில் அரிசியை விற்பனை செய்வதாகவும், லாரிக்கு சுமார் 3 டன்கள் வரை அரிசி கொள்ளை நடப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் இயக்கி வரும் லாரிகளுக்கு சரியான ஆவணமும் இல்லை, ஆவணங்கள் புதுப்பிக்கப்படவும் இல்லை. ஆர்.டி.ஓ-விடம் லாரிகளின் ஆவணம் குறித்து புகார்கள் அளித்தும், அவர்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். 

வாலாஜாபேட்டை வாணிப கிட்டங்கி அமைந்துள்ள பகுதிக்கு எதிரே நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளதாகவும், லாரி நகருக்கு செல்லும் வழியான அணைக்கட்டு பகுதியில் சிறுவர்கள் முதல் பல பொதுமக்கள் பயணித்து வரும் நிலையில், நெரிசல் மிகுந்த சாலையில் முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்கள் இயங்கி, வரும் நாட்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்னாவது? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. 

புகைப்படம் : வாணிப கிட்டங்கியில் இருந்து இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்படும் அரிசி.

தவறுகள் செய்பவர்கள் யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தால் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆர்.டி.ஓ. வரை லாரிகள் குறித்து புகார் சென்றும் பலனில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்ல அனுமதி இல்லாத நிலையில், அதிக பாரம் ஏற்றப்படும் லாரிகள் எப்படி காவல் துறையினரின் கண்களை மீறி வெளி நகருக்கு அல்லது நகர எல்லையை விட்டு பயணிக்கிறது? என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ranipet Walajapet Civil Supply Corporation Goodes Down RTO Black Listed Lorry Running with Over Load


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->