பல அடி உயரத்தில் ஆர்ப்பரிக்கும் அலைகள்.. தனுஷ்கோடியில் அலட்சியத்துடன் செல்ஃபி எடுக்கும் மக்கள்.!
Rameshwaram turisit break the rule
கடந்த மூன்று நாட்களாகவே ராமேஸ்வரத்தில் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கடலோர பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4-வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதுபோல தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் சீற்றம் இருக்கிறது. இத்தகைய நிலையில், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு அங்கே அனுமதி மறுக்கப்பட்டு தடுப்பு கம்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அதை பொருட்படுத்தாத ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை தாண்டி துறைமுகப் பகுதிக்குள் சென்று பல அடி உயரத்திற்கு சீறி எழும் கடல் அலைகள் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் தகவல் தெரிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர்.
English Summary
Rameshwaram turisit break the rule