இராமேஸ்வரம் ஸ்ரீ இராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய 2 நாட்கள் தடை - மாவட்ட நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மேலும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கோவில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வரும் புதன்கிழமை (அக். 6) மகாளய அமாவாசை தினம் வருகிறது. இதனால் இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகளவு வாருங்கள். 

இதனை கருத்தில் கொண்டு, கொரோனா பரவல் மேலும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் 5 ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதி ஆகிய நாட்களில், இராமேஸ்வரம் இராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்யவும், கடலில் நீராடவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Rameswaram Agni Theertham Oct 5 and 6 Cancelled


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->