காரில் ஏ.சியை இயக்கியவாறே மது அருந்தியவர் மரணம்... கண்ணீரில் மனைவி, கைக்குழந்தை.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி எமனேஸ்வரம் வைகை நகரில் வசித்து வருபவர் மிதுன் குமார். இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இவரது மனைவி சுகன்யா வங்கியில் பணியாற்றி வருகிறார். 

இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற குழந்தையும் உள்ள நிலையில், நேற்று மாலை தன் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் உள்ளேயே இருந்தவாறு மிதுன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் மிதுன் குமார் வீட்டிற்கு திரும்பாத நிலையில், அவரை தேடி அவரது தாயார் லதா சென்றுள்ளார். 

அந்த சமயத்தில், மிதுன் குமார் காருக்குள் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மிதுனின் தாயார் லதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அப்போது மிதுன் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகவே, மனைவி சுகன்யா தனது கணவர் இறந்ததை அறிந்து பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், காரில் உள்ள ஏசியை இயக்கியவாறே மது அருந்தியதால் விஷ வாயு உருவாகி இறந்து போனாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்து போனாரா? என்பது குறித்து அறிய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram man died Consumption Alcohol Locked Car Using Air Condition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal