அரசுப்பள்ளி விடுதியில் அரைகுறை குளியல்.. தட்டிக்கேட்ட சமையலர்.. கொளுத்திப்போட்ட அரசு பள்ளி ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


அரசுப்பள்ளி விடுதியின் பொது இடத்தில் அநாகரிகமாக குளித்துக் கொண்டிருந்ததால், அறிவுரை கூறிய சமையலறையின் வாகனத்தை ஆசிரியர் எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அரசு மாணவர் விடுதியில், சமையல்காரராக பணியாற்றி வருபவர் செல்வ தேவேந்திரன். இங்கு அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பவரும் தங்கியுள்ள நிலையில், விடுதியில் உள்ள பொது குளியல் தொட்டியில் குளிக்கும் போது, அரசு பள்ளி ஆசிரியர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனைப்பார்த்த செல்வ தேவேந்திரன் ஆசிரியரை நாகரீகமான முறையில் குளிக்கக்கூறி அறிவுரை கூறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செல்வேந்திரன் விடுதிக்கு சென்று விட்ட நிலையில், ஆத்திரத்தில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ், மாணவர் விடுதிக்கு சென்று தேவேந்திரனை தாக்க முயற்சித்துள்ளார். 

இதனால் பயந்துபோன தேவேந்திரன் விடுதி அறையை உட்புறமாக பூட்டி கொள்ளவே, அவரின் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியர் சுரேஷ், பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்த சம்பவத்தில் தேவேந்திரனின் இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து கருகிய நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த முதுகுளத்தூர் காவல்துறையினர், அரசுப்பள்ளி ஆசிரியர் சுரேஷ் மற்றும் அவருக்கு உதவி புரிந்து ராஜா என்பவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanathapuram Govt School Teacher Burn Hostel Cooking Person Bike


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->