என்னோட வாழ்க்கையே அதிசயம், அற்புதம் நிறைந்ததுதான்.. பியருடன் ரஜினி டாக்.!!  
                                    
                                    
                                   rajini speech about his life with bear 
 
                                 
                               
                                
                                      
                                            பிரபலமான டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மேன் வெர்சஸ் வைல்ட்" நிகழ்ச்சியானது உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த சேனலின் தமிழ் ஒளிபரப்பும் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுடன் இந்நிகழ்ச்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து, இதற்க்கான படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வரும் திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ காட்சிகள் வெளியான நிலையில், இதில் பியர் க்ரில்ஸ் ரஜினிகாந்திடம் கேள்வி கேட்க அவர் பதில் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ காட்சியில், எனது வாழ்க்கையே அதிசயமானது தான்.
சரியான உதாரணமாக இந்நிகழ்ச்சியை கூட கூறலாம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைப்போன்று பல சுவாரசிய கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil 
                                     
                                 
                   
                       English Summary
                       rajini speech about his life with bear