ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி இயற்கை சூழல் கொண்ட பகுதி ஆகும். இந்த பகுதிகளில் அரியவகை உயிரினங்கள் பலவும் வாழ்ந்து வருகிறது. சாம்பல் நிற அணில் உயிரின உய்விடமாக கடந்த 1989 ஆம் வருடம் உய்விடம் தொடங்கப்பட்டது. 

480 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இப்பகுதி, மழை தட்பவெப்ப நிலையில் பலவிதமான மாறுபாடுகளை கொண்டவை ஆகும். இந்த வனப்பகுதி யானை, மான், வரையாடு, புலி, சிங்கவால் குரங்கு, கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில்கள் போன்றவற்றின் வாழ்விடம் ஆகும். 

அகன்ற புல்வெளி, மலைகளின் மடிப்பு, அமைதியான ஆறு மற்றும் சீறிப்பாயும் சிற்றாறு என பல அம்சங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில், சாம்பல் நிற அணில்கள் வசித்து வருகிறது. அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் இருக்கும் சாம்பல் நிற அணில்கள், குட்டிபோட்டு பால் கொடுக்கும் பாலூட்டி ஆகும். 

வருடத்திற்கு ஒரு குட்டி ஈன்று வரும் சாம்பல் நிற அணில்கள் கர்ப்பகாலம் 35 முதல் 40 நாட்கள் ஆகும். சாம்பல் நிற அணில்கள் 15 வருடம் வரை உயிருடன் இருக்கும். மூக்கில் சிவப்பு நிறமும், முதுகில் சாம்பல் நிறமும், வால் நீண்டு வயிறு பெருத்து காணப்படும்.

இந்நிலையில், தற்போது மலைகளில் இருக்கும் இயல்பான சீதோஷ்ண நிலை போன்ற பல காரணத்தால் இவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் உணவு தேடி வரும். ஆற்றங்கரையோரம் மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து வரும் சாம்பல் நிற அணில்கள் மாம்பழம், புளியம்பழம், இளம் தளிர்களை உட்கொள்ளும். 

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு, காட்டழகர் கோவில், இராஜபாளையம் அய்யனார் கோவில், வத்திராயிருப்பு, சுந்தரமகாலிங்கம் பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் ஏரளமாக உள்ளது.
கடந்த 1972 ஆம் வருட வனவிலங்கு வேட்டை தடுப்பு சட்டத்தின் படி, இதனை பிடித்தல் அல்லது வேட்டையாடுதல் கடும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajapalayam Srivilliputhur Watrap Gray squirrels 27 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->