வேலூரில் நிகழ்ந்த அதிசயம்!! உற்சாகமடைந்த பொதுமக்கள்!!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெயிலுக்கு பெயர் போன நகரம் என்றால் அது வேலூர் நகரம் தான். அக்னி நட்சத்திர காலத்தில் 112 டிகிரி வெயில் வேலூரில் நிலவியது. அக்னி வெயில் முடிந்த பிறகும் கூட வேலூரில் அதிகபட்ச வெப்பத்தையே காணமுடிந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த இந்த மழை மழை கொட்டி தீர்த்தது. அதற்கு பிறகு சீரான இடைவெளியில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக புதிய பேருந்து நிலையம், அண்ணா சாலை, காமராஜர் சிலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது.

ஆற்காடு சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே மழைநீர் செல்ல போதுமான வசதி இல்லாததால், கடைகளுக்குள் நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்கு உள்ள சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று சிக்கியது. எனவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் பயணம் செய்து இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

பின்னர், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பொதுமக்கள் அந்த காரை மீட்டெடுத்தனர். இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரும்மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->