சென்னையைச் சுற்றி தொடரும் மழை: 5 லட்சம் உணவு பொட்டலங்கள்...! நேர்மறை நிவாரண பணியில் மாநகராட்சி வேகப் பேரணி!
Rain continues around Chennai 5 lakh food parcels Corporation speed rally positive relief work
சென்னையில் மூன்றாவது நாளாக இடையறாத மழை கொட்டித் தீர்கிறது. இந்த தொடர்ச்சியான மழையால் சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கிய நிலையில், பாதிப்புகளை குறைக்க மாநகராட்சி அதிவேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மொத்தம் 215 அவசர முகாம்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றன. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் உள்ளதால் இதுவரை யாரும் முகாம்களுக்கு மாற்றப்படவில்லை; உணவு விநியோகமே முதன்மையாக மேற்கொள்ளப்படுகிறது.
முன்தினம் காலை மட்டும் 32,500 சிற்றுண்டிகள், நேற்று மதியம் 91,600 பேருக்கு மதிய உணவு, நேற்றிரவு 1,54,000 இரவு உணவு பாக்கெட்டுகள் தயாரித்து வழங்கப்பட்டன.இன்று காலை மட்டும் 2,23,500 உணவு பொட்டலங்கள் சமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் பகிரப்பட்டன.
மாநகராட்சியின் சுத்தமான சமையலறைகளில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு, மழை பாதிப்புக்கு உள்ளான மக்களிடம் இதுவரை மொத்தம் 5,01,600 உணவு பொட்டல்கள் ஆக வழங்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து, தேவையான இடங்களில் உடனடி உதவிகளை அனுப்பி வருகின்றனர்.
English Summary
Rain continues around Chennai 5 lakh food parcels Corporation speed rally positive relief work